Sunday, October 25, 2009

அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள அச்பேன் (ASPEN) நகரத்தின் சிறப்பு


அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள அச்பேன்(ASPEN) நகரத்தின் சிறப்பு:

நான் எழுதிய மரூன் பெல்ஸ் பற்றிய கட்டுரைக்கு tamilish மூலம் வந்த உங்களின் மேலான ஆதரவு என்னை உங்களிடம்  பணிய  வைத்து விட்டது. ஆதரவு
 கொடுத்த ஊக்கி வித்த அனைவருக்கும் நன்றி. இதோ  என் பணியினை ஆரம்பித்து  விட்டேன்..


கொலராடோ மாநிலம் முழுவதும் மலைகளால் சூழபட்டுள்ளது. உலக சிறப்பு மிக்க ராக்கி மௌன்டைன் கொலராடோவில் உள்ளது. அச்பேன் மலைகளும் ராக்கி மௌன்டைன் தொடர்ச்சி தான்.  அச்பேன் நகரத்தின் சிறப்பை பட்டியளிடுள்ளேன்.

1) உலக பிரசித்தி பெற்ற சிக்யிங் இடம் (skiing)
2) இலையுதிர் காலத்தில் பார்க்க வேண்டிய இடம்
3) இயற்கை அழகான மலைகள்

கொலராடோ மாநிலத்தில்  பல சிக்யிங்(skiing) இடங்கள் உள்ளன. அதில் பிரசித்தி பெற்ற இடம் அச்பேன். இங்கு பல மாநிலத்தில் உள்ளவர்களும்  சிக்யிங் செய்வதற்காக இங்கு வருகிறார்கள். உலகளவில் நடக்கும் சிக்யிங் போட்டிகளும் இங்கு நடக்கின்றன.

குறிப்பு : போட்டோ பெரிதாக பார்க்க போட்டோ மேல் மௌசை கிளிக் செய்யுங்கள்.



நாங்கள்  அச்பேன் இலையுதிர்  காலத்தில்  பார்த்து விட்டு வந்தோம்.  அதனால் அங்கு ஸ்நொவ் அப்பொழுது இல்லை. ஆனால் அச்பேன் சுற்றி உள்ள பகுதிகளில் பனி படர்ந்த மலைகளை காண முடிந்தது







கௌண்டலாவில் ஏறி பயணம்  செய்து  மேல வந்தோம். இமய
 மலைகு நிகராக பனி மலைகள் பரவச மூட்டியது .




இங்கு தான் சிவன் இருந்து தவம் செய்வாரோ  என்று தோன்றியது .


என்னால் வரம் கொடுக்க முடியாது. சிரிக்க முடிந்தால் சிரியுங்கள் ....


  



அச்பேன் மலைகள் ( FIRE WORKS ) இரவு நேரத்தின்  போது எடுக்க பட்டது - mouse click செய்து பெரிய தாக்கி பாருங்கள்




   இங்கு இலையுதிர் காலத்தில் மரங்களின் இலைகளின் நிறம் மாறும் அழகை ரசித்து கொண்டே இருக்கலாம் .







மரூன் பெல் மற்றொரு தோற்றம் - சூர்ய உதயத்தில்


 


பனி காலம் ஆரம்பம் / முடிவிலும் மலைகளில் பனி (snow) குறையும் பொழுது செயற்கை உக்தி செய்து பனி உருவாக்குகின்றனர். அதை பற்றி நான்  எழுதுகிறேன். கொலராடோவில் உள்ள  பிற ச்கியிங் (Skiing)  பற்றியும் எழுதுகிறேன்

தயவு செய்து TAMILISH - இல் ஓட்டளித்து எங்களை உற்சாக படுத்துங்கள்



 (தொடரும் )

0 comments:

Post a Comment