தமிழில் (GPS VOICE GUIDANCE) வழி சொல்லும் போன் - DEMONSTRATON - வீடியோ
பதிவு கீழே
இப்போதேல்லாம் மொபைல் போன்களில் புது விதமான வசதிகள் வந்த வண்ணம் உள்ளது. இப்பொழுது GPS வசதியும் மொபைல் போனில் தர ஆரம்பித்து விட்டார்கள்.
GPS - என்றால் குளோபல் பொசிசனிங் சிஸ்டம் ஆகும். நீங்கள் காரில் போகும் பொழுது நீங்கள் போக வேண்டிய விலாசத்தை கொடுத்து விட்டால் இந்த GPS நீங்கள் போவதற்கான வழியை சொல்லும். இந்த GPS SATTELLITE துணை கொண்டு இயங்குகிறது. நாம் இருக்கும் இடத்தை SATTELLITE - ஐ தொடர்பு கொண்டு தெரிந்து கொண்டு, மேலும் இந்த GPS இல் உள்ள மேப் வைத்து எங்களுக்கு வழி சொல்லுகிறது
பெரும்பாலான மொபைல் போன்களில் ASSISTED GPS வசதி கொடுக்கப்பட்டது. (EXAMPLE : IPHONE ) ASSISTED GPS என்றால் உங்கள் கார் உள்ள POSITION ஐ இன்டர்நெட் மூலம் அறிந்து உங்களுக்கு வழி சொல்லும். அதாவது உங்கள் போன் நேரடியாக SATELLITE ஐ தொடர்பு கொள்ளாது.
நோக்கியா 5800 எக்ஸ்பிரஸ் மியூசிக் - நேவிகேசன் எடிசன் மொபைல் போன் தற்பொழுது GPS வசதியுடன் வருகிறது. இது மற்ற போன்களில் உள்ள ASSISTED GPS போல் இல்லாமல் ஒரிஜினல் GPS வசதியுடன் சேர்த்து கிடைகிறது. இந்த போன்-இல் உள்ள GPS இயங்கும் பொழுது INTERNET வசதி தேவை இல்லை.
இந்த போனில் மற்றுமொரு பிடித்த சிறப்பு என்னவென்றால், இந்த போனில் உள்ள GPS இல் VOICE GUIDANCE ஐ தமிழில் அமைத்து கொள்ளல்லாம். மேலும் HINDI இல் அமைத்து கொள்ளலாம். அதாவது இந்த GPS வழி சொல்லும் பொழுது தமிழில் கட்டளை இடும்.
உதாரணமாக நீங்கள் வலது பக்கம் திரும்ப வேண்டும் எ ன்றால்
"600 கெஜதிற்கு அப்பால் வலது புறமாக திரும்பவும்" என்று வழி சொல்லும்.
===========================================================================
நம் இந்திய மொழிகளில் தமிழ் மற்றும் ஹிந்தியில் மட்டும் நோக்கியா இந்த வாய்ஸ் GUIDANCE வசதி கொடுத்திரிக்கிறது. அதாவது வேறு எந்த இந்திய மொழிகளிலும் கொடுக்க வில்லை.
அதாவது தமிழுக்கு, தமிழனுக்கு பெருமை.
=============================================================================
இந்த GPS PHONE எப்படி தமிழில் VOICE GUIDANCE செய்து வழி காண்பிக்கிறது
என்பதை உங்களுக்காக வீடியோ பிடித்து காண்பித்துள்ளேன்.
NOKIA 5800 GPS VOICE GUIDANCE IN TAMIL - DEMONSTRATION VIDEO - PART - 1
NOKIA 5800 GPS VOICE GUIDANCE IN TAMIL - DEMOSNTRATION VIDEO - PART - 2
நான் காரை ஓட்ட என் மகன் வீடியோ பதிவு செய்து கொண்டு வந்தான். அதாவது திரை கதை, வசனம், DIRECTION - ஷ்யாம். ஒலி/ஓளி பதிவு - அஷ்வின்
உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
அன்புடன்
ஷ்யாம்
ஸ்யாம் சுத்த தமிழ் சில நேரங்களில் குழப்பமடைகிறது, ஒருவேளை பழகினால் சரியாகிவிடுமோ என்னமோ. சரி சரி உங்க ஊரை சுற்றி கான்பித்ததற்கு நன்றி
ReplyDeletebeemboy-erode.blogspot.com
CORRECT, அது என்னமோ இதற்காக பேசும் பொழுது பேச்சு சரியாக வரவில்லை. சரி செய்து கொள்கிறேன். உங்கள் கருத்திற்கு நன்றி.
ReplyDelete- ஷ்யாம்
வலைச்சரம் மூலமாக வந்தேன், ஸ்டார்ஜனுக்கு நன்றி
ReplyDelete